புதிய ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பதவிக்காலம் முடிந்து விலகிக் கொள்ளவுள்ள மைத்ரிபால சிறிசேன.
2015ம் ஆண்டு, மைத்ரி - ரணில் கூட்டாக ஆரம்பித்த கொள்கைப் போராட்டம், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எதையும் செய்து முடிக்காது திணறிய நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஆரம்பித்து ஜனாதிபதி தேர்தல் வரை தோல்வி கண்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற மைத்ரியின் அரசியல் பிரளயம் மக்கள் மத்தியில் முழுமையான அவநம்பிக்கையை உருவக்கியிருந்த அதேவேளை, தமது பதவிக்கால முடிவில் கோட்டாபே ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் மைத்ரிபால சிறிசேன
No comments:
Post a Comment