எனது அரசில் அங்கம் வகிக்க 'தகைமை' வேண்டும்: சஜித் நிபந்தனை! - sonakar.com

Post Top Ad

Saturday, 2 November 2019

எனது அரசில் அங்கம் வகிக்க 'தகைமை' வேண்டும்: சஜித் நிபந்தனை!


தான் ஜனாதிபதியானதும் உருவாகவுள்ள அரசில் அங்கம் வகிப்பதற்கு அடிப்படைத் தகைமைகள் தேவைப்படுவதாக தெரிவிக்கிறார் புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச.



இதற்கு முன் திருட்டு, மற்றும் ஊழலில் ஈடுபட்ட எவருக்கும் தாம் இடமளிக்கப் போவதில்லையென அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, தனது ஆட்சியில் பயனுள்ள வெளிநாட்டுப் பயணங்களுக்கு மாத்திரமே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment