தனது குடியுரிமை தொடர்பிலான சந்தேகத்தைத் தீர்த்து வைப்பது கோட்டாபே ராஜபக்சவின் கடமையென சுட்டிக்காட்டியுள்ளனர் சிரேஷ்ட சட்டத்தரணிகள்.
தேர்தல் ஆணைக்குழுவுக்கும் கோட்டாபே ராஜபக்ச எதுவுதி ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லையென தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் விளக்கம் மேலும் சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளதாகவும் இப்பின்னணியில் சந்தேகத்தைத் தீர்க்க வேண்டியது கோட்டாபே ராஜபக்சவின் கடமையெனவும் சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
வேட்பாளரின் குடியுரிமையை பரிசோதிப்பது தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்டது எனும் ரீதியில் கோட்டாபே ராஜபக்ச இதனைத் தெளிவுபடுத்த வேண்டியது அவரது தார்மீகக் கடமையென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment