வீண் வதந்திகளை நம்பி யாரும் வாக்களிப்பதைத் தவிர்த்து விட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தனது உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், அனைத்து மக்களும் வாக்களிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தாம் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனதும் உரிமையெனவும் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, எவ்வித வதந்திகளையும் நம்பாது மக்கள் ஜனநாயக முறையில் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கப் பங்களிக்க வேண்டும் என விசேட அறிக்கையூடாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment