ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லையென கார்டினல் மெல்கம் ரஞ்சித் சுட்டிக்காட்டியதையடுத்து புதிய விசாரணைக்குழுவொன்றை அமைத்து விசாரணை நடாத்தப் போவதாக வாக்குறுதியளித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டாபே ராஜபக்ச இன்று நேரில் சென்று கார்டினலை சந்தித்து உரையாடியிருந்தார்.
இந்நிலையிலேயே இதற்கான வாக்குறுதியை கோட்டாபே வழங்கியுள்ளதுடன் இனியொரு தடவை இவ்வாறான அசம்பாவிதம் நடைபெறாது எனவும் அங்கு அவர் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment