தற்சமயம் நிலவும் எரிவாயு பற்றாக்குறையால் சுமார் ஆயிரம் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
90 வீதமான நவீன பேக்கரிகள் எரிவாயுவிலேயே தங்கியிருப்பதாகவும் இப்பின்னணியிலேயே இந்நிலை தோன்றியிருப்பதாகவும் விளக்கமளிக்கப்படுகிறது.
இதேவேளை, இவ்வாரத்துக்குள் தட்டுப்பாடு நீங்கிவிடும் என அரச தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment