ரோயல் பார்க் கொலை விவகாரத்தின் பின்னணியில் அண்மையில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நபருக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அன்டனி ஜயமஹ என அறியப்படும் குறித்த நபருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.
இந்நிலையில் பொது மன்னிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் டிசம்பர் 11 வரை இப்பிரயாணத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment