விவாதிக்க வாருங்கள்: கோட்டாவுக்கு சஜித் கடிதம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 3 November 2019

விவாதிக்க வாருங்கள்: கோட்டாவுக்கு சஜித் கடிதம்!



எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி மக்கள் புத்திசாலித்தனமான தேர்வொன்றை மேற்கொள்ளும் நிமித்தம் எமது தேர்தல் விஞ்ஞாபனங்கள் மற்றும் திட்டங்களை முன் வைத்து நேருக்கு நேரான விவாதம் ஒன்றை நடாத்துவதற்கு நான் விடுத்திருந்த அழைப்புக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை, இருந்தும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் என கோட்டாபே ராஜபக்சவுக்கு நேரடியாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் சஜித் பிரேமதாச.



அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பொன்றை நடாத்திய கோட்டாபே ராஜபக்ச, அங்கு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியிருந்த நிலையில் சஜித்தின் விவாத அழைப்புக்கு எவ்வித பதிலையும் வழங்காமல் தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில், உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டால் கோட்டா வருவார் என பெரமுன தரப்பினர் பிரச்சாரம் செய்து வந்தனர். இப்பின்னணிணியேலே சஜித் இவ்வாறு கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment