நாட்டைக் காப்பதற்கும் சிங்கள தேசத்தை உருவாக்குவதற்கும் இதுவே கடைசி சந்தர்ப்பம் எனும் இனவாதத்தின் அடிப்படையிலேயே கோட்டாபே ராஜபக்சவின் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள சுஜீவ சேனசிங்க, அப்படியென்றால் ஈற்றில் முஸ்லிம் - தமிழ் மக்களை கடலில் தான் போட வேண்டி நேரிடும் என விசனம் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான கூற்றுக்களோடே கோட்டாவின் பிரச்சார வாகனங்கள் சென்று கொண்டிருப்பதாகவும் அப்படிப் பார்த்தார் புத்தரும் சிங்களவர் இல்லையெனவும் தெரிவிக்கின்ற சுஜீவ, இலங்கையர் என்ற ஓரினமாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமே தவிர இனவாதத்தின் அடிப்படையில் முன்னேற முடியாது என்றும் தெரிவிக்கிறார்.
நாட்டின் 35வீதம் மக்கள் இவ்வாறு இனவாத பிரச்சாரங்களுக்குள் அகப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுஜீவவின் பேச்சடங்கிய காணொளி:
No comments:
Post a Comment