ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கு சட்டத்தில் இடமில்லையென தெரிவிக்கிறார் அவரது சட்டத்தரணியும் தீவிர பிரச்சாரகருமான அலி சப்ரி.
அரசியலமைப்பின் 35வது சரத்தின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு எதிராக எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் வழக்குகளையும் தொடுக்கவோ, விசாரிக்கவோ முடியாது என்பதை சுட்டிக்காட்டிய நிலையில் டி.ஏ ராஜபக்ச நினைவக ஊழல் வழக்கிலிருந்து கோட்டாபே ராஜபக்சவை நீதிமன்றம் விடுவித்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
இந்த விடயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம் அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும் என்பதால் கோட்டாபே ராஜபக்சவுக்கு எதிரான எந்தவொரு வழக்கும் விசாரிக்கப்பட மாட்டாது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment