சஜித் வேண்டுகோள்: உண்ணாவிரதம் முடிவு! - sonakar.com

Post Top Ad

Thursday, 14 November 2019

சஜித் வேண்டுகோள்: உண்ணாவிரதம் முடிவு!



கோட்டாபே ராஜபக்சவின் குடியுரிமை பற்றிய உண்மையான தகவல்களை வெளியிடக் கோரி உண்ணாவிரதமிருந்து வந்த சுமங்கள தேரர் இன்று காலை சஜித் பிரேமதாசவின் வேண்டுகோளுக்கிணங்க தனது போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளார்.



மூன்று தினங்களுக்குள் கோட்டாவின் அமெரிக்க குடியுரிமை பற்றிய தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் எனக் கோரி அவர் உண்ணாவிரதமிருந்து வந்த போதிலும் இதுவரை அது தெளிவுபடுத்தப்படவில்லை. இதேவேளை ஸ்தலத்துக்குச் சென்ற சஜித்தோடு உரையாடியதன் பின் அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

உண்ணாவிரதமிருந்த சுமங்கள தேரர் பெரமுன ஆதரவு சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment