சுவிஸ் தூதரக ஊழியர் ஒருவர் வெள்ளை வேனில் கடத்தி, மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் முதலில் அரசு அறிந்திருக்கவில்லையென தெரிவிக்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன.
குறித்த விவகாரம் தொடர்பில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததோடு சுவிஸ் வெளியுறவுத்துறை அமைச்சு நேரடியாக இலங்கை அரசிடம் இது தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடாத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையிலேயே நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து பந்துல இவ்வாறு தெரிவித்திருந்த அதேவேளை தற்போது பொலிஸ் மற்றும் சி.ஐ.டியினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment