மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் பிரதமராகப் பதவியேற்றதும் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 1ம் திகதிக்குள் நாடாளுமன்றைக் கலைப்பதானால் அதற்கேற்ப நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டிய சூழ்நிலையுள்ளது. எனினும், முன் கூட்டியே பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு பெரமுன தரப்பு தயாராக இல்லையென தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அது வரையான காபந்து அரசொன்றுக்கு ஒத்துழைப்பு வழங்கி ஒதுங்குவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ள நிலையிலேயே இவ்வாறு புதிய அமைச்சரவை நியமனமும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment