ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள கட்சியின் ஒரு பிரிவினர் தொடர்ந்தும் மறுப்பு வெளியிட்டு வரும் நிலையில் ஆளுங்கட்சியில் உள்ள 106 உறுப்பினர்களிடம் அபிப்பிராய வாக்கெடுப்பு நடாத்தி பெரும்பான்மை ஆதரவுள்ளவருக்கு அந்தப் பதவியைத் தரும்படி தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.
கட்சித் தலைவர் ஒருவரே எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சம்பிரதாயத்தைத் தாம் மாற்ற விரும்பவில்லையென தெரிவித்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும், கட்சித் தலைமை அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு விட்டுக் கொடுக்கும் படி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment