கோட்டாபே ராஜபக்ச பதவியேற்றதும் சில இடங்களில் தமிழில் இருந்த பெயர்ப் பலகைகள் நீக்கப்படும் செயல்களும், முயற்சிகளும் இடம்பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் விசனம் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாணந்துறையில் இவ்வாறு தமிழ் பெயர் அழிக்கப்பட்ட நிலையில் காணப்படும் பெயர்ப் பலகையின் படங்களை வெளியிட்டு, இதற்கு ஜனாதிபதி என்ன பதில் சொல்லப் போகிறார்? என கேள்வியெழுப்பியுள்ளார் மங்கள சமரவீர.
பேரினவாதத்தின் கோர முகம் தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்குள்ளேயே வெளிப்பட்டு விட்டதாக மங்கள விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment