சஜித் பிரேமதாசவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது தொடர்பில் கூட்டணி கட்சிகளுடன் பேசிய பின்னரே முடிவெடுக்கப் போவதாக தெரிவிக்கிறார் ஐ.தே.க செயலாளர் அகில விராஜ் காரியவசம்.
கட்சித் தலைமைப் பதவியும் சஜித்துக்கு வழங்கப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்திவருகின்ற அதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கட்சித் தலைவருக்கே வழங்க முடியும் என சபாநாயகர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
சஜித் பிரேமதாசவுடன் தனிக் கட்சியொன்றையும் ஆரம்பிக்கத் தயார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment