ஈஸ்டர் தாக்குதல்தாரிகளின் தந்தை கோட்டாபே ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கி வருவதாக வெளியான தகவல்களில் எதுவித உண்மையுமில்லையென மறுக்கிறது பெரமுன.
குறித்த நபர், மன்னாரில் பெரமுன சார்பு பிரச்சாரத்துக்கு உதவியதாகவும் விருந்துபசாரம் வழங்கியதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலையே பெரமுன மறுக்கிறது.
அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டிருந்த கோட்டாபே ராஜபக்ச, தான் அடிப்படைவாதிகள் யாரையும் இணைத்துக் கொள்ளப் போவதில்லையென தெரிவித்திருந்த அதேவேளை நாடறிந்த பேரினவாத அடிப்படைவாதிகளில் பெரும்பாலானோர் கோட்டாபே ராஜபக்சவுக்கே ஆதரவளித்து பிரச்சாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment