இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோட்டாபே ராஜபக்சவுக்கு இந்தியா, பாகிஸ்தான், பஙகளதேஷ் போன்ற நாடுகள் இதுவரை வாழ்த்துத் தெரிவித்துள்ளன.
எனினும், மைத்ரிபால சிறிசேனவின் தேர்வான போது காட்டிய ஆர்வம் மேற்கு நாடுகளிடம் இம்முறை இல்லையென்பது அவதானிக்கத்தக்கது.
ராஜபக்ச அரசின் வெளியுறவு கொள்கைகள் தொடர்பில் அவதானத்துடன் கவனித்து வரும் நிலையில், இலங்கைக்கான அமெரிக்க தூதர் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாக எண்ணம் வெளியிட்டுள்ளார். இதேவேளை, மைத்ரிபாலவின் நியமனம் வெகுவான வரவேற்பைப் பெற்றிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment