முக்கிய கொலை விவகாரங்களின் விசாரணைகளை மேற்கொண்டு வந்த சி.ஐ.டி பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும் விசாரணைகள் தங்குதடையின்றி தொடரும் என தெரிவிக்கிறார் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர.
இதேவேளை, அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போதான வன்முறை சம்பவங்களின் பின்னணியில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
யட்டியந்தொட்ட - ஹம்பந்தொட்ட பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகள் தனியார் பிரச்சினைகள் என முன்னதாக பொலிசார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment