அகில இலங்கை பாடசாலை ரீதியிலான மெய்வல்லுனர் போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் எம்.ஆர்.எம்.ஷஹீப் என்ற மாணவன் 12வயதுக்குட்பட்டவர்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் தேசிய மட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இது அகில இலங்கை ரீதியில் சுமார் பதினெட்டு வருடங்களுக்கு பின்னர் மெய்வல்லுனர் போட்டியில் பாடசாலைக்கு கிடைத்த வெற்றியென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றிக்காக பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டலை மேற்கொண்ட அனைவருக்கும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஜாபீர், பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தார்.
-எம்.என்.எம்.அப்ராஸ்
No comments:
Post a Comment