அரிசிக்கும் பணத்துக்கும் வாக்குகளை விற்றுவிடாதீர்கள்: அமீர் அலி - sonakar.com

Post Top Ad

Thursday, 14 November 2019

அரிசிக்கும் பணத்துக்கும் வாக்குகளை விற்றுவிடாதீர்கள்: அமீர் அலி



உங்களுடைய கஷ்டங்களை கருத்திற் கொண்டு உங்களுக்கு அரிசி பேக்கும் பணமும் தந்து உங்களது வாக்குகளை கேட்டு வருவார்கள் அதில் நீங்கள் அவதானமாக இருந்து கொள்ள வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.



ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இடம்பெற்ற இறுதிக் கூட்டம் நேற்று (13) காவத்தமுனையில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,வெறும் ஆயிரம் ரூபாய்க்களையும் அரிசிகளையும் வாங்கி உண்டு உங்களது வாக்குகளை நீங்கள் வீணாக்கினால் அது நஞ்சு உண்பதக்கு சமன் என்றுதான் நான் நினைக்கின்றேன்.

உங்களுடைய வாக்கை ஒட்டகத்திற்கு போடச் சொல்லி வருவார்கள். நீங்கள் மொட்டுக்கும் போடத் தேவையில்லை, அன்னத்திக்கும் போடத் தேவையில்லை இதோ ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்கள் தருகின்றோம் சத்தியம் செய்யுங்கள் நீங்கள் ஒட்டகத்திக்கு போடுங்கள். என்று சொல்லி வருவார்கள் இது ஒரு தந்திரோபாயமான விடயம் என்பது என்னை விடவும் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கின்றேன்.

இந்த ஒட்டகம் ஏன் கேட்கிறது என்று சொன்னால் நேரடியாக கோத்தாபாய ராஜபக்சவுக்குக் வாக்குக் கேட்டால் முஸ்லிம் சமூகம் வாக்குப் போடமாட்டார்கள் என்பதற்காக, முஸ்லிம்களுடைய வாக்கை குறைக்க வேண்டும் என்பதற்காக ஒட்டகத்தில் சகோதர் ஹிஸ்புல்லாஹ் களமிறங்கியுள்ளார்.

இவர் ஏன் களமிறங்கியுள்ளார் என்றால் சஜித் பிரேமதாசாவுக்கு போடவுள்ள வாக்குகளை இல்லாமல் செய்கின்ற சதித் திட்டமே தவிற வேறொன்றும் கிடையாது.

எனவே உங்களுடைய வறுமையை சிலர் விலைபேச இந்தப் பிரதேசத்திலே அலைந்து திரிகின்றார்கள். அதில் நீங்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று நான் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்களான எம்.பீ.எம்.ஜௌபர், ஜெஸீமா, மற்றும் வட்டாரக் குழுத் தலைவர்கள், உறுப்பினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment