சிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் கலைப்பதாக இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அறிவித்துள்ளார் ஞானசார.
சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளின்றி நாட்டில் ஆட்சியமைக்க முடியாது என இருந்த மாயை உடைத்தெறியப்பட்டு விட்டதாகவும் இப்போது சிங்கள இனத்துக்கு நல்ல தலைவர் ஒருவர் உருவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், பொதுத் தேர்தலின் பின் சிறந்த அமைச்சரவை ஒன்றை உருவாக்கி நாட்டை வழி நடாத்துவார் எனும் நம்பிக்கையிருப்பதால் இனிமேல் தமது அமைப்புக்கான தேவையில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இப்பின்னணியில், தமது அமைப்பைக் கலைக்கப் போவதாக ஞானசார தெரிவிக்கின்றமையும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் வரை பொது பல சேனா அமைப்பை வழி நடாத்துவது யார்? என்ற வாத விவாதம் முஸ்லிம் சமூகத்துக்குள் ஆதிக்கம் செலுத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment