இறுதித் தூதர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு இரண்டு கட்டுரைப் போட்டிகளை நடாத்துவதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தீர்மானித்துள்ளது.
ஆய்வுக் கட்டுரை
தலைப்பு : “பல்லின சமூகங்களுக்கிடையிலான நட்புறவும் நபிகள் பெருமானாரின் வழிகாட்டல்களும்”
சொற்கள் : 4500 – 5000
மொழி : தமிழ் மற்றும் சிங்களம்
தகைமைகள் : பி.ஏ (B.A), எம். ஏ (M.A) முடித்தவர்கள் அல்லது ஆசிரியர் பயிலுனர் கல்லூரியில் பயின்றவர். (College of Education)
விருதுகள்:
முதலாமிடம் : ரூபா 100,000
இரண்டாமிடம் : ரூபா 75,000
மூன்றாமிடம் : ரூபா 50,000
பங்குபற்றுபவர்களில் 20 நபர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.
கட்டுரை
தலைப்புக்கள்:
“நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பன்முக ஆளுமை”;
அல்லது
“நற்குண சீலர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்”
அல்லது
“மனித நேயம் போதித்த மாநபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்”
சொற்கள் : 1500 – 2000
மொழி : தமிழ் மற்றும் சிங்களம்
தகைமைகள் : உயர் தரப் பரீட்சையில் தோற்றியவர்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்பவர்கள்.
விருதுகள் :
முதலாமிடம் : ரூபா 75,000
இரண்டாமிடம் : ரூபா 50,000
மூன்றாமிடம் : ரூபா 30,000
பங்குபற்றுபவர்களில் 20 நபர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.
நிபந்தனைகள்
- கட்டுரை சுய ஆக்கமாக இருக்க வேண்டும்.
- இதற்கு முன் எழுதப்பட்ட ஆக்கமாக இருக்கக்கூடாது.
- உசாத்துணைகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
- முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாத விருப்பமுள்ள அனைவரும் பங்குபற்றலாம்.
- பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பன கட்டுரையுடன் சேர்த்து இணைக்கப்பட வேண்டும்.
- கட்டுரை எழுத விரும்புவர்கள் 10.12.2019 ஆம் திகதிற்கு முன்பாக ஜம்இய்யாவின் பின்வரும் இலக்கத்துடன் தொடர்ப்பு கொண்டு தங்களை பதிவு செய்;து கொள்ளவேண்டும்.
கட்டுரைகள் யாவும் 31.01.2020 திகதிக்கு முன்னர் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படல் வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “கட்டுரைப் போட்டி 2019” எனக் குறிப்பிடப்படவேண்டும்.
ஆண்கள், பெண்கள் அனைவரும் பங்குபற்ற முடியும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
281, ஜயந்த வீரசேக்கர மாவத்த,
கொழும்பு -10
மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்:
011-7490490 / 077-3185353 (வார நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00மணி வரை)
-ACJU
-ACJU
No comments:
Post a Comment