ஜனாதிபதி தேர்தல்: 80 வீத வாக்குப் பதிவு - sonakar.com

Post Top Ad

Saturday, 16 November 2019

ஜனாதிபதி தேர்தல்: 80 வீத வாக்குப் பதிவு


ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் 80 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக, இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் அவதானிக்க முடிகிறது.



கண்டி, நுவரெலிய, கம்பஹ, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 80 வீதம் தாண்டியுள்ள அதேவேளை, பல மாவட்டங்களில் 72 முதல் 75 வீத வாக்களிப்பு பதிவாகியுள்ளது. 

யாழ் மாவட்டத்திலும் எதிர்பார்த்ததை விட அதிக மக்கள் வாக்களிப்பில் பங்கேற்றுள்ள நிலையில் இன்றிரவு பத்து மணி முதல் தபால் மூல வாக்களிப்பின் முடிவுகளும் நள்ளிரவு முதல் ஏனைய முடிவுகளும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment