4G தொழிநுட்பம் பழையதாகி 5G யுகம் ஆரம்பித்துள்ளது, ஆயினும் சஜித்துடன் இணைந்து இன்னும் தூர நோக்குடன் சிந்தித்து 6G தொழிநுட்ப யுகத்துக்குத் தயாராகுமாறு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
அநுராதபுரத்தில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், தொழிநுட்ப ரீதியாக நாட்டை முன்னேற்றவல்ல இளைஞர் சஜித் என தெரிவித்திருந்தார்.
இதேவேளை, கொழும்பு போன்று ஒவ்வொரு நகரையும் தான் தொழிநுட்ப ரீதியாக முன்னேற்றப் போவதாக சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment