புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திலிருந்து ஆறு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பிரதேசத்திலிருந்து 53 கிலோ கிராம் வெடி மருந்து நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே இவ்வாறு வெடி மருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதேசத்திலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் தேடல் இடம்பெற்றதாக புதுக்குடியிருப்பு பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
No comments:
Post a Comment