ரூ 53 பில்லியன் செலவில் புதிய இராணுவ தலைமையகம்! - sonakar.com

Post Top Ad

Friday, 8 November 2019

ரூ 53 பில்லியன் செலவில் புதிய இராணுவ தலைமையகம்!



பெலவத்த, அகுரேகொட பகுதியில் சுமார் 53.3 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இராணுவ தலைமையகம் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.



கொழும்பு, கோட்டை பகுதியில் இலக்கம் 1, காலி வீதியில் அமைந்திருந்த இராணுவ தலைமையகத்தை கோட்டாபே ராஜபக்ச - மஹிந்த சகோதரர்கள் சீன நிறுவனம் ஒன்றுக்கு நட்சத்திர ஹோட்டல் நடாத்த வழங்கியதன் பின் பல இடங்களில் தற்காலிகமாக இராணுவ தலைமையகம் இயங்கி வந்ததுடன் மாதாந்தம் 50 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டு வந்ததாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்நிலையிலேயே புதிய இராணுவ தலைமையகம் சகல நவீன வசதிகளுடனும் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது பதவிக் காலம் முடியும் இத்தருவாயில் ஒத்துழைப்பு வழங்கிய இராணுவத்தினருக்கும் ஏனைய பாதுகாப்பு துறையினருக்கும் ஜனாதிபதி தனது நன்றியையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Abdul said...

Just wasting money for Army.War is over nobody anymore interesting again problems but just money spending.

Post a Comment