எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியுற்றால், ஐக்கிய தேசியக் கட்சியினால் அடுத்து வரும் 30 வருடங்களுக்கு தலைதூக்க முடியாது என தெரிவிக்கிறார் அமைச்சர் ஹலீம்.
அக்குறணையில் இடம்பெற்ற பிரச்சாரத்தின் போதே இவ்வாறு தெரிவித்த அவர், இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இத் தேர்தல் முக்கியமானது எனவும் ஐக்கிய தேசியக் கட்சி தப்பித் தவறியும் தோல்வியுற்றால் மீண்டும் 30 வருடங்களுக்கு ஆட்சியதிகாரத்துக்கு வர முடியாது என விளக்கமளித்துள்ளார்.
இப்பின்னணியில் தமது கட்சிக்காரர்கள் ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment