ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபே ராஜபக்ச வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்து நாடாளுமன்றின் எதிர்காலம் குறித்த கேள்வியெழுப்பப்பட்டு வருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் ஆதரவு அமைச்சர்கள் பதவி விலகியுள்ள போதிலும், முழுமையான அமைச்சரவை இன்னும் பதலி விலகாத நிலையில் நாடாளுமன்றினை முன்னெடுத்துச் செல்ல மூன்று முன்மொழிவுகளை எடுத்துரைத்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.
1. மார்ச் 1ம் திகதி பதவிக்காலம் முடிந்ததும் நாடாளுமன்றைக் கலைப்பது
2. மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நாடாளுமன்றைக் கலைப்பது
3. புதிய ஜனாதிபதியின் தலைமையிலான காபந்து அரசமைக்க இடம் கொடுத்து நடைமுறை அமைச்சரவை பதலி விலகுவது ஆகியனவே அவை.
தற்சமயம் பெரமுன தரப்புக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையில்லாத நிலையில், ரணில் விக்கிரமசிங்க தரப்பு எடுக்கக் கூடிய முடிவு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment