மஹரகம தங்க நகை விற்பனை நிலையம் ஒன்றில் கொள்ளையிட்ட இரு நபர்களுக்கு 27 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது கொழும்பு உயர் நீதிமன்றம்.
ஆயுதம் தரித்த கும்பல் ஒன்றினால் நடாத்தப்பட்ட இக்கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் மூவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் இருவருக்கு, தலா 9 லட்சம் அபராததும் 27 வருட கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் 148,000 ரூபா பெறுமதியான நகைகளையே கொள்ளையடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment