இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ளது.
நாடளாவிய ரீதியில் 12,845 வாக்களிப்பு நிலையங்கள் இதற்கென இயங்கியிருந்த அதேவேளை 15,992,096 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லையாயினும், அதிகாலையில் மன்னாருக்கு வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தததுடன் பரவலாக வாக்காளர் இடைமறித்து வலியுறுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ளதுடன் நள்ளிரவு முதல் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment