2012ம் ஆண்டு கட்டுவானயில் இடம்பெற்ற ஜே.வி.பி அரசியல் கூட்டம் ஒன்றில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து இருவரைக் கொலை செய்த ஜுலம்பிட்டியே அமர என அறியப்படும் நபரின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது தங்கல்ல நீதிமன்றம்.
50 வயது பெண்ணொருவரும் 18 வயது இளைஞனும் குறித்த சம்பவத்தில் உயிரிழந்திருந்த அதேவேளை மேலும் இருவர் காயமடைந்திருந்தனர்.
நீண்ட விசாரணையின் பின் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment