19ம் திருத்தச் சட்டத்தை ஆராய்ந்து நடவடிக்கை: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Sunday, 17 November 2019

19ம் திருத்தச் சட்டத்தை ஆராய்ந்து நடவடிக்கை: மஹிந்த


ரணில் - மைத்ரி கூட்டாட்சியில் கொண்டுவரப்பட்ட 19ம் திருத்தச் சட்டத்தை ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவிக்கிறார் பெரமுன தலைவர் மஹிந்த ராஜபக்ச.



கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்ததும் குறித்த சட்டமூலத்தை நன்கு ஆராய்ந்து அதற்குத் தேவையான மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கிறார்.

18ம் திருத்தச் சட்டம் ஊடாக ஒரே நபர் இரு தடவைகளுக்கு மேலும் ஜனாதிபதி பதவி வகிப்பதற்கு வழி உருவாக்கப்பட்டிருந்த போதிலும் 19 ஊடாக அது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment