16 மாவட்டங்களில் சஜித் முன்னணியில்: மனோ - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 November 2019

16 மாவட்டங்களில் சஜித் முன்னணியில்: மனோ



25 மாவட்டங்களில் சஜித் பிரேமதாச 16 மாவட்டங்களில் முன்னணி வகிக்கின்றார். வடக்கு ,கிழக்கு மத்திய, ஊவா, சப்ரமுகவ கொழும்பு, புத்தளம், பொலன்னறுவை உள்ளிட்ட பல மாவட்டங்களில்  அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவார் என்று தேசிய சகாழ்வு அரச கரும மொழிகள் மற்றும் இந்து சமய கலாசார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.



இந்நாட்டில் இன முரண்பாடுகளைத் தவிர்த்து வடக்கு கிழக்கு தெற்கு மத்தி என எல்லாப் பகுதி மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஜனாதிபதி வேட்பாளரையே நாங்கள் நிறுத்தியுள்ளோம் என்று இராஜாங்க அமைச்சர் ஜே. சி அலவத்துவெல தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், கொழும்பில் கோல் பீசில் கூடிய சனக் கூட்டத்தை அடுத்து  இராண்டாவது சனக் கூட்டம் நாங்கள் கூட்டிய  கூட்டம் என்றே கூற முடியும். கைதட்டல்கள் பூமாலைகள் என்பவையெல்லாம் தேவையில்லை எதிர் வரும் 16 திகதி அன்னச் சின்னத்துக்கு வாக்களிப்பதற்காக தங்களுடைய நண்பர்கள். உறவினர்கள், அயலவர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோருக்கும் எடுத்துக் கூறி சஜித் பிரேதமாசவுக்கு வாக்களிக்க  வேண்டும். 

தேர்தல் ஆரம்பத்தில்; ஜனாதிபதி கோத்தபாயவுக்கு இருந்த செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து இன்று சஜித் பிரேமதாசவின் செல்வாக்கு உயர் நிலை அடைந்து விட்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி,  முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திரு கோணமலை, மட்டக்களப்பு,  அம்பாறை , நுவரெலியா, கண்டி, மாத்தளை, புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை,  கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை  ஆகிய மாவட்டங்களில் சஜித் பிரேமதாச முன்னணியில் இருந்து கொண்டு இருக்கின்றார். 25 மாவட்டங்களில் சுமார் பதினேழு, பாதினாறு மாவட்டங்களில் அதிகளவு வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கவுள்ளன.  

சஜித் பிரேமதாசவின் விசேடம் என்னவென்றால் ஏழை எளிய மக்கள், கஷ்ப்படும் மக்கள் துன்பப்படும் மக்கள்  எல்லாம் நன்கு அறிந்தவர். கொலை, கொள்ளை, இரத்தக்கறை எதிலும் சம்மந்தப்படாதவர்.
எதிர் தரப்பினர் சஜிதை களமிறக்க மாட்டார்கள் . வேறு எவரைச் சரி களிமிறக்குவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தார். சஜிதை களமிறக்கியதுடன் அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அவர்கள் நினைத்தார்கள் அவர் வரமட்டார். அவர் வருவார். இவர் வருவார் என்ற பெரியளவில் கற்பனை பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதற்கு நாங்கள் இடம்கொடுக்க வில்லை. இன்று சஜித் ஒருவரால் தான் ஐக்கிய இலங்கையை உருவாக்க முடியும். வேறு எவராலும் முடியாது. 

ராஜபக்ஷ மேடையில் யார் இருப்பது. அதில் அவர்களுடைய குடும்பம் தான் இருக்கும். அண்ணன், தம்பிமார்கள்,  எல்லோரும் இருப்பார்கள். இங்கு அவை இல்லை. சஜித்துடன் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், சம்மந்தன் போன்ற பெரிய பெயர் பட்டியல் இருக்கின்றது. அவர் பெயர்  எதிர் தரப்பினர்களுக்கு அதிர்வலை ஏற்பட்டது. 

சஜித் பிரேமதாச இலங்கையின் எல்லா சுற்று வட்டங்களுக்கும் சென்று மக்களின் உள்ளகளைத் திருடிய ஒரு கள்வனாக சஜித் பிரேமதாச மாறிவிட்டாh, அவர் பணம் திருடவில்லை.  மற்றவர்களுடைய சொத்துக்களைத் திருடவில்லை ஆனால் மனதைத் திருடிய திருடனாக ஆகிவிட்டார். நாங்கள் சஜிதை சும்மா கொண்டு வரவில்லை அளந்து பார்த்து நிறுத்துப் பார்த்துத்தான் நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம். குருநாகல் மாவட்டம் மலையக மாவட்டங்களிலுள்ள அனைத்து தோட்ட மக்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்துக் கொள்ளக் கூடியவர். 

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஜனாதிபதி செயலகப் பிரிவு ஸ்தாபிக்கப்படும். அப்பிரதேச அமைச்சர், அரசியல் பிரதி எல்லோரும் இருந்தாலும் ஜனாதிபதி செயலகம் மூலம் நேரடியான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான சந்தப்பம் ஏற்படவுள்ளது. இதன் மூலம் மக்களுடைய தேவைகள் இன்னும் கூடுதலாக நிறைவேற்றப்படும் ஜனாதிபதித் தேர்தல் தேசிய ஐக்கியத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். இதை நாங்கள் இல்லாற் செய்ய இடமளிக்கமாட்டோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

-இக்பால் அலி

  

No comments:

Post a Comment