கோட்டாபே ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்கா, கலிபோர்னியாவில் முன்னாள் சண்டே லீடர் பத்திரிகையாசிரியர், கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் புதல்வி சார்பில் அங்குள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரிக்க ஏற்க மறுத்துள்ளது நீதிமன்றம்.
கோட்டாபே ஒரு அரச அதிகாரியாக இருந்த காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பில் அமெரிக்காவில் விசாரணை செய்வதற்கு சட்டத்தில் இடமில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் கோட்டாபே நேரடியாகக் குற்றஞ்சாட்டிருக்கப்பட்டிருக்கவில்லையென்பதும் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் கடமைகளைச் செய்யத் தவறியதாகவே குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment