ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியமைத்தால் தான் அரசியலை விட்டு முழுமையாக ஒதுங்கிவிடப் போவதாக தெரிவிக்கிறார் மேல் மாகாண ஆளுனர் முசம்மில்.
கம் உதாவ எனும் பெயரில் சிறிய வீடுகளைக் கட்டிக் கொடுத்து சஜித் பிரேமதாச மக்களை ஏமாற்றி வருவதாகவும் தெரிவிக்கின்ற அவர், ஐக்கிய தேசியக் கட்சியினால் ஒரு போதும் ஆட்சியமைக்க முடியாது என தெரிவிக்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியூடாக கொழும்பு மேயரான முசம்மில், பிற்காலத்தில் மஹிந்த ராஜபக்சவுடன் நல்லுறவைப் பேணி வந்ததுடன், அண்மையில் மஹிந்தவின் தலையீட்டிலேயே ஆளுனர் பதவியையும் பெற்றுக் கொண்டதாக அரசியல் தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment