தற்போதைய இராணுவ தளபதியின் படம் மற்றும் கூற்று அடங்கிய விளம்பரங்கள் கோட்டாபே ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவதாக முறையிட்டுள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.
கடமையில் இருக்கும் இராணுவ தளபதியொருவருடைய படம் மற்றும் அவரது ஆதரவு இருப்பதாகக் காட்டும் வகையிலான பிரச்சாரம் தேர்தல் விதிகளுக்கு முரணானது என சுட்டிக்காட்டியுள்ள திஸ்ஸ அத்தநாயக்க, இது தொடர்பில் ஜனாதிபதியிடமும் எழுத்து மூலம் முறையிடவுள்ளதாக தெரிவிக்கிறார்.
இந்நிலையில், இது குறித்து தேர்தல் ஆணைக்குழு உடனடி விசாரணையை நடாத்த வேண்டும் எனக் கோரி ஐக்கிய தேசியக் கட்சி முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment