கோட்டாபே தான் எதிர்வரும் தேர்தலில் வெற்றியீட்டப் போவதாகவும் அவரை ஆதரிப்பதே நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது எனவும் தெரிவிக்கிறார் துமிந்த திசாநாயக்க.
தீவிர மஹிந்த எதிர்ப்பாளராக இருந்த துமிந்த இன்றைய தினம் கோட்டாபே ராஜபக்சவின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
முன்னதாக சின்னத்தை மாற்ற வேண்டும் என நிபந்தனை விதித்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது நிபந்தனையின்றி கோட்டாபேவுக்கு ஆதரவு வழங்க முன் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment