![](https://i.imgur.com/Pw4ZNwn.png?1)
எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே விளங்கும் எனவும் மீண்டும் தமது கட்சி ஆட்சியின் பங்காளியாகப் போவது உறுதியெனவும் தெரிவிக்கிறார் துமிந்த திசாநாயக்க.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுத்தளமே ஒட்டு மொத்தமாக மஹிந்த ராஜபக்சவின் பெரமுன வாக்கு வங்கியாக மாறியுள்ள போதிலும் கடந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஆகக்குறைந்தது சுதந்திரக் கட்சி வசம் 10 லட்சம் வாக்குகள் இருப்பதாக கணிக்கப்படுகிறது.
இப்பின்னணியிலேயே துமிந்த இவ்வாறு தெரிவிக்கின்றமையும், கடந்த பொதுத் தேர்தலில் தனது தொகுதியில் தோல்வியுற்ற ஹிஸ்புல்லாஹ், தேசிய மட்டத்தில் 2 லட்சம் வாக்குகளைப் பெற்றுத் தானே ஜனாதிபதியைத் தீர்மானிக்கப் போவதாகவும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment