உதய கம்மன்பிலவின் கட்சியான பிவித்து ஹெல உறுமயவில் வகித்து வந்த பிரதித் தலைவர் பதவியிலிருந்து மது மாதவ விலகியுள்ளதாக அக்கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
பெரமுன ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபே ராஜபக்சவை ஆதரித்து மேற்கொண்ட பிரச்சரம் ஒன்றின் போது முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைக் கக்கியிருக்கும் மது மாதவவின் பேச்சடங்கிய காணொளி இன்று வெளியாகியிருந்த நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாகவே முஸ்லிம் விரோதப் போக்கை வெளிக்காட்டி வரும் மது மாதவ போன்றவர்கள் பெரமுனவையே தமது தேர்வாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment