ஈஸ்டர் தாக்குதலைப் போன்று பிறிதொரு தாக்குதல் இடம்பெறக்கூடும் என கடிதம் ஒன்றை வெளியிட்ட குற்றச்சாட்டுக்குள்ளான கொழும்பு, கோட்டை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதரிகாரி பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தின் அனுமதியின்றி குறித்த நபர் இவ்வாறு கடிதம் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அதன் பின்னணியில் பதற்றமும் சந்தேகமும் உருவாகியிருந்தது.
இந்நிலையிலேயே குறித்த நபர் பணியிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment