ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான தீர்மானத்தின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் மற்றும் உயர் மட்டத் தலைவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்து தேசிய ஐக்கிய முன்னணியும் சஜித் முகாமில் இணைந்து கொண்டுள்ளது.
சற்று முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற நேரடி பேச்சுவார்த்தையின் பின் உத்தியோகபூர்வமாக தமது தரப்பு பிரச்சாரங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அசாத் சாலி சோனகர்.கொம்முக்கு தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன, சாகல ரத்நாயக்க உட்பட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் சோனகர்.கொம்மின் அரசியல் நேரலை நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி வெளியிட்டிருந்த கருத்துக்களை கீழ் காணும் காணொளியில் காணலாம்.
No comments:
Post a Comment