நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தின் போது காலி முகத்திடலில் லட்சக் கணக்கான மக்கள் திரண்டிருந்ததாக தெரிவிக்கப்படுவதை மறுக்கின்ற கம்மன்பில, கூடிப் போனால் 75,000 பேர் இருந்திருப்பார்கள் என விளக்கமளித்துள்ளார்.
ஜே.வி.பியின் மக்கள் சக்தி கூட்டத்தில் இடைவெளிகளை உருவாக்கி நாற்காலிகளை வைத்திருந்ததனால் 20,000 பேரை மிகப் பெரிய கூட்டம் போன்று சித்தரித்திருந்ததாகவும் தெரிவிக்கின்ற அவர் பெரமுன கூட்டத்திலேயே லட்சக் கணக்கில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.
சஜித் பிரேமதாசவின் உத்தியோகபூர்வ பிரச்சாரக் நடவடிக்கை காலிமுகத்திடலில் நேற்று ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment