வாக்களிப்புக்கு மேலதிகமாக ஒரு மணி நேரம்: தேசப்பிரிய - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 October 2019

வாக்களிப்புக்கு மேலதிகமாக ஒரு மணி நேரம்: தேசப்பிரிய


இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புக்கு மேலதிகமாக ஒரு மணி நேரம் இணைக்கப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.



இதனடிப்படையில் காலை 7 முதல் மாலை 5 மணி வரை வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

35 வேட்பாளர்களுடன் நீண்ட பட்டியல் இருக்கின்ற அதேவேளை தெரிவு வாக்குகள் தொடர்பிலும் குழப்பங்கள் நிலவுகிறது. இந்நிலையில், தமக்கு விரும்பிய வேட்பாளரின் பெயருக்கு நேரே புள்ளடியிடுவதன் ஊடாக நிராகரிக்கப்படும் வாக்கு எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளலாம் என அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment