சஜித் நிர்வாகத்தில் மெகா அபிவிருத்திகள் வரும்: ரணில் - sonakar.com

Post Top Ad

Monday, 28 October 2019

சஜித் நிர்வாகத்தில் மெகா அபிவிருத்திகள் வரும்: ரணில்


சஜித் பிரேமதாசவின் நிர்வாகத்தின் கீழ் மெகா அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.



நடைமுறை அரசினால் முன் வைக்கப்பட்டுள்ள இத்திட்டங்களை சஜித் நிர்வாகத்தின் கீழ் செயற்படுத்த முடியும் எனவும் நாடு அபிவிருத்தியடைவதை விரும்புகிறவர்கள் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் ரணில் தெரிவிக்கிறார்.

இந்தியாவுடனான கூட்டுறவில் மத்தள அபிவிருத்தி, கொழும்பு துறைமுக நகரின் அபிவிருத்தி மற்றும் பல பொருளாதார வலயங்களின் உருவாக்கம் என இவ்வரவு திட்டமிட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் சஜித் ஜனாதிபதியானதும் தடங்கல் இன்றி இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment