சர்வதேசதின் விருப்பதிற்கு இணங்க இந்நாட்டின் தாய் மண்ணுக்கு பாதகமான முறையில் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கோ அரசியல் இலாபத்துக்கோ அல்லது வேறு காரணங்களுக்காகவே தாய் நாடு களங்கம் ஏற்படுமளவுக்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப் போவதில்லை என்று நான் உறுதியளிக்கின்றேன் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து மாவத்தகம நகரில் சாமோதய விளையாட்டு மைதானத்தில் மாவத்தகம தேர்தல் தொகுதி அமைப்பாளர் ஜே. சி. அலவதுவெல தலைமையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சஜித் பிரேமதாச இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், மாவத்தகம பிரதேசத்தில் தெங்கு இறப்பர் மற்றும் வேளாண்மை செய்கையாளர்களை முக்கிய கவனத்திற் கொண்டு பசளைகளை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதை அடுத்து தோட்டப் பயிர்ச் செய்கையாளர்களையும் கவனத்திற் கொண்டு மரக்கறி வகைகள், பழ வகைள் மற்றும் சிறு ஏற்றுமதி பயிர்ச் செய்கைகளுக்காக உரம் இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
எங்கள் நாட்டுக்கு வெளிநாட்டவர்களுக்கு சிறு ஏற்றுமதிப் பயிர் சம்மந்தமாக இதுவரைக்கும் எந்நாளாவது எந்த அரசாங்கம் மூலமாவது அதற்கான அமைச்சோ, திணைக்களமோ தனியாக உருவாக்கப்பட வில்லை. நான் ஜனாதிபதியான பின் அதற்கான அதிகார சபை ஒன்றை வருக்வேன் என்று அவர் தெரிவித்தார்.
வீடற்ற பிரச்சினையை தீர்த்து வைக்கும் வகையில் மத்திய தரத்தினர்களுக்கு உதாகம வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கி வைப்பது என்னுடைய நோக்கமாகும். 2025 ஆம் ஆண்டுக்குள் சகலருக்கும் வீட்டு வசதியைப் பெற்றுக் கொள்வதற்காக வேலைத் திட்டம் மேற்கொள்ளப்படும். சமுர்த்தி கொடுப்பனவு மேலும் தொடர்ந்து சக்திமிக்கதாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவத்தகம மற்றும் மல்லவப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் 116 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளில் உள்ள 422 கிராமங்களையும் சனசவிய வேலைத் திட்டத்தின் மூலம் சக்திமிக்கதாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலையின் வேலைத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்படும். பாடசாலை செல்லும் 44 இலட்சம் மாணவர்களுக்கு இரு சீருடைகள், சப்பாத்து மற்றும் மதிய உணவு வகைகள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நான் சொல்வதைச் செய்பவன். நேரத்துக்கு வேலை செய்வேன்.
எமது நாட்டு இளைஞர் யுவதிகள் தொழில் நுட்ப மாற்றத்துக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். அதன் காரணமாக சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நாடு பூராகவும் 332 தொழில் நுட்ப கல்லூரிகள் ஆரம்பிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்கிலத் துறையிலும் தொழில் நுட்பத் துறையிலும் இளைஞர்களை மேம்படுத்துவதுடன் இலங்கையில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வது மட்டுமல்லாது உலக தொழில் துறையிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான வழி வகைகள் செய்யப்படும்.
அத்துடன் கைத் தொழில் துறையை மேம்படுத்தும் நோக்குடன் ஆடைத் கைத்தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டு பிரதேசத்தில் தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிடல் மாற்றத்துக்கு ஏற்ப முதல்தர நாடாக உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பிறக்கும் பிள்ளைகளின் மூளை வளர்ச்சி ஐந்து வருட கால கட்டத்திலாகும். முன்பள்ளிப்பாடசiலை செல்லவுள்ள சகல மாணவர்களும் இலவசமான கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கும் மற்றும் முன்பள்ளி ஆசிரியைகளுக்கு அரசாங்கத்தின் மூலம் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், பீல்ட் மாசல்சரத் பொன்சேகா, இராஜாங்க அமைச்சர் ஆசோக அபேசிங்க மாவத்தகம எதிர்கட்சித் தலைவர் முஹமட் ரிபாழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-இக்பால் அலி
No comments:
Post a Comment