பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் அதன் பெயர் யாழ் சர்வதேச விமான நிலையமாக மாற்றம் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் நடுப்பகுதியில் இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வொன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களும் இவ்வாறே சர்வதேச விமான நிலையங்களாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் 10ம் திகதியளவில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment