2015ம் ஆண்டு ஆறு வருடங்களுக்கான ஜனாதிபதியாக மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் பதவியிலிருக்கும் நிலையில் தேர்தல் ஆணைக்குழு சட்டவிரோதமாக ஜனாதிபதி தேர்தலை அறிவித்துள்ளதாகவும் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரி இன்று வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் காலி மேயர் மெத்சிறி டி சில்வா இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளதுடன் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
இப்பின்னணியில் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என மனு தாரர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment