மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த கோட்டாபே ராஜபக்ச , நீதிமன்ற அனுமதி பெறப்பட்ட காலத்துக்குள் நாடு திரும்பியுள்ளார்.
டி.ஏ ராஜபக்ச நினைவக நிர்மாண ஊழலின் பின்னணியில் வெளிநாட்டு பிரயாண தடை விதிக்கப்பட்டுள்ள கோட்டாபேவுக்கு கடந்த 9ம் திகதி முதல் மூன்று தினங்கள் மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
இப்பின்னணியில் சென்றவர், இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment