எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெரமுன ஆதரவுத்தளமாகக் கருதப்படும் குறித்த பிரதேச சபையின் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் சர்ச்சையின் பின்னணியில் தேர்தல் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிமன்ற தலையீட்டில் தற்போது தேர்தல் இடம்பெறுகிறது.
நேற்றைய தினம் இது குறித்து கருத்து வெளியிட்ட மஹிந்த, தமது ஆதரவாளர்களை வெற்றிக் கொண்டாட்டத்துக்குத் தயாராகும் படி அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment